181 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா! இந்திய அணி அபார பந்துவீச்சு!
IND vs AUS 5 Test 2024
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது.
நேற்றைய முதல் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40 ரன்கள், விராட் கோலி 26 ரன்கள், மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா 22 ரன்கள் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், நேற்றைய ஆட்டநாள் முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.
இன்று இரண்டாவது நாளில், ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் போராடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி, ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களிலேயே சுருட்டினர்.
இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸின் அடிப்படையில் 4 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளது.