வேற லெவல் லவ் : சலீம் - அனார்கலி காதலை மிஞ்சிய நிகழ்கால இரு யானைகளின் காதல் கதை.!
two elephant love story
மத்திய பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் உள்ள பாதவ்கார் புலிகள் சரணாலயத்தில் உள்ள அதிகாரிகளும், உமாரியா தேசிய வனவிலங்குப் பூங்காவில் உள்ள அதிகாரிகளும் திடீர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த குழப்பத்திற்கு என்ன காரணமா?
தங்களது நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகவும், சிறப்பாக பயிற்சி பெற்று வந்த, 58 வயதுடைய அனார்கலி என்ற யானைக்கும், கிராம மக்களால் சலீம் என பெயர் சூட்டப்பட்ட 35 வயதுடைய ஆண் யானைக்கும் இடையே ஏற்பட்ட காதல் தான்.
நான்கு குட்டிகளுக்குத் தாயான அனார்கலி மீது, சலீமுக்கு ஏற்பட்ட காதல் மிகவும் விசித்திரமானது என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.
இது மனிதர்கள் காதலை விட மிகவும் புனிதமானது என்றும், இருவரும் ரோமியோ ஜூலியட் காதல் போல் ஒருவருக்கு ஒருவர் காதலிப்பதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த தலைவன் யானையானது, தனது கூட்டத்திலிருந்து யாருக்கும் தெரியாமல், ஒரு சத்தமும் இல்லாமல் நழுவிச் சென்று, தனது தலைவியான அனார்கலியின் கூட்டத்தை நோக்கி காதல் வட்டம் போட்டு வருவதை இரண்டு அல்லது மூன்று முறை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
மேலும், தலைவன், தலைவியை தனது தந்தத்தால் கொஞ்சி தள்ளுவதை பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு இரண்டு காதலர்களும் காட்டுக்குள்ளேயே தலைமறைவாகி விடுவார்கள். பிறகு தலைவி தள பகுதிகளில் உள்ள தனது முகாமுக்கு எந்த ஒரு சத்தமும் இல்லாமல் வந்து தங்கிவிடும் என்று, இந்தக் காதல் ஜோடிகளின் அட்டகாசங்களை வனத்துறையினர் எடுத்துரைக்கின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சரணாலயத்தில் வசித்த வரும் அனார்கலிக்கும், மிகவும் இளம் வயதான சலீமுக்கும் குட்டிகள் பிறந்தால், அந்த குட்டிகள் மிகவும் ஆரோக்கியமாகவும் மற்றும் பலசாலிகளாகவும் இருக்கும் என்று வனத்துறையினர் எதிர்பார்க்கிறார்கள்.
தனது கூட்டத்தைப் பிரிந்து சலீமின் கூட்டத்திற்கு செல்லும் ஆபத்து இருப்பதையும் அவர்கள் தெரிந்து உள்ளனர்.
ஏனென்றால், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, வனத்துறையினரிடம் நன்கு பயிற்சி பெற்ற 11 வயது பந்தாவி என்ற பெண் யானை, மற்றொரு கூட்டத்தில் இருந்த ஆண் யானையுடன் காதல் வசப்பட்டு, தனது கூட்டத்திலிருந்து பிரிந்து ஆண் யானையின் கூட்டத்துக்குச் சென்றது.
ஆனால், அந்த யானைகள் பந்தாவியை ஏற்றுக் கொள்ளாததால், காதல் தோல்வியுடன் இரண்டு நாள்களுக்குப் பிறகு தனது கூட்டத்துக்கே திரும்பியது.
இங்கு அனார்கலியுடன் 4 குட்டிகளும் இருக்கின்றன. எனவே, அனார்கலி தனது குட்டிகளுடன், சலீமின் கூட்டத்துக்குச் சென்றால், அங்கு அந்த யானைக் கூட்டத்தால், குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
புலிகள் சரணாலயத்தில் உள்ள பயிற்சி பெற்ற 14 யானைகளில் ஒன்றான அனார்கலி, பிகார் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. மிகவும் பயிற்சி பெற்ற நம்பிக்கைக்குரிய யானையாகவும் இருக்கிறது. ஆனால் அவர்களின் இந்த காதல் ரோமியோ ஜூலியட் , ஆன்டனி கிளியோபாட்ரா போன்ற காதல் ஜோடிகளை போல சலீம் அவர்களின் காதல் கதை மிகவும் சுவாரசியமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.