வாட்ஸ் அப்பில் ஹிந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான குரூப் - சர்ச்சையை கிளப்பிய 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகை அன்று, கேரளா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வாட்ஸ் அப் செயலியில், ' ஹிந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ' என்ற பெயர் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் பலர் இடம்பெற்று இருந்தனர். மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த முடிவு அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி ஆகும்

ஆனால், மத ரீதியில் பெயர் கொண்ட 'வாட்ஸ் அப் குரூப்' ல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் குரூப்பை ஆய்வு செய்த போது அதன் அட்மின் ஆக இருந்தது மாநில தொழில்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் என்பவரது பெயரை காட்டியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இந்த குரூப் கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார், அதில், தனது நண்பர் ஒருவர் கூறியபிறகே வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது தெரியவந்தது. எனது போன் ஹேக் செய்யப்பட்டதுடன், அதன் மூலம் பல வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன எனக்கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர்மட்ட விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்.பிரசாந்த் உள்ளிட்ட இருவரையும் இடைநீக்கம் செய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two ias officers suspend for hindu ias officers whatsapp group controversy in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->