2 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகரின் முடிவால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

இதனால், அவரது கட்சியின் சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

இதற்கிடையே, ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததால், ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.வான லோபின் ஹெம்ப்ரோம் மற்றும் காங்கிரஸ் எம் எல் ஏவான ஜெய் பிரகாஷ் பாய் படேல் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

எண்பத்து ஒன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two mla disqualified in jarkant assembly


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->