அடுத்தடுத்து 2 உயிர்களை பறித்த டெங்கு! புதுச்சேரி மக்களே உஷார்! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் குருமாம் பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பகுதியில் சேர்ந்த காயத்ரி (19) என்ற கல்லூரி மாணவி உடல் நலக்குறைவு காரணமாக முக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததன் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையிலும் அவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மீனாரோஷினி (28) என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two people died causes of dengue fever in Puducherry today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->