தேனி || திருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் - கணவர் செய்த கொடூரச் செயல்.!
two peoples arrested for kill youth in theni
திருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் - கணவர் செய்த கொடூரச் செயல்.!
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அலாவுதீன் - ஷாபனா. இந்த நிலையில், அலாவுதீன், குடும்ப செலவு காரணமாக காபில்கான் என்பவரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார்.
இதுதொடர்பாக, காபில் கான் ஷாபனாவை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில், இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த அலாவுதீன், காபில் கானின் உறவினர்களிடம் முறையிட்டுள்ளார். அதன் படி அவர்கள் காபிலை அழைத்து கண்டித்துள்ளனர். இருப்பினும், காபில் ஷாபனாவுடனான உறவை கைவிடவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அலாவுதீன் காபில் கானைக் கொலை செய்ய திட்டமிட்டு, அதற்காக வாங்கிய கடனை தருவதாக கூறி அவரை சின்னமனூர் நகர் பகுதியில் உள்ள வண்டிப்பேட்டை பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பி காபிலும் சென்றுள்ளார்.
அங்கு தனது மைத்துனர் முகமது ஷமியுடன் காத்திருந்த அலாவுதீன், காபிலிடம், இனி தன் மனைவியுடன் செல்போனில் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகராறாக முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த அலாவுதீன் மற்றும் அவரது மைத்துனர் ஷமி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காபிலை குத்தியுள்ளனர்.
இதில் காபில் கான், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அளித்த தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காபில் கான் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அலாவுதீன் மற்றும் முகமது ஷமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியிடம் செல்போனில் பேசிய வாலிபரை கணவரும், மைத்துனரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
English Summary
two peoples arrested for kill youth in theni