ஒடிசா : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் - ஆத்திரத்தில் தந்தை செய்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் - ஆத்திரத்தில் தந்தை செய்த விபரீதம்.!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயதுடைய ஒரு நபர் வேலை பார்த்து வந்தார். 

இவர் வேலை நடைபெற்ற பகுதிக்கு அருகே வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

அதன் பின்னர் இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for murder case in odisa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->