ம.பி ||  காட்டுப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட 11 வயது சிறுமி - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


ம.பி ||  காட்டுப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட 11 வயது சிறுமி - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாட்னா மாவட்டம் அர்காண்டி டவுன்ஷிப் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென்று காணாமல் போயுள்ளார். மகளைக் காணவில்லை என்று பதற்றமடைந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியுள்ளனர். 

இருப்பினும், அவர் கிடைக்காததால், அவரது பெற்றோர் சம்பவம் தொடர்பாக போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி போலீசார் அந்த சிறுமியைத், தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமி வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் படுகாயத்துடன் காணப்பட்டார். 

இதைப்பார்த்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, ''மைஹாரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த தகவல் அறிந்தேன். எனது இதயம் வலியால் நிறைந்துள்ளன. 

பெரும் மனஉளைச்சல் அடைகிறேன். போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு முறையாக உயர் சிகிச்சை வழங்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த சம்பவத்தில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for sexuall harassment case in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->