கேரளாவில் அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் அமெரிக்க பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி 44 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவா், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஓா் ஆசிரமத்தில் தங்கியிருத்தாா். இதையடுத்து அந்த பெண், ஆசிரமத்துக்கு அருகே உள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த இரண்டு போ் அந்த பெண்ணுக்கு துபானத்தைக் கொடுத்துள்ளனர். அதை அந்த பெண் வாங்கி அருந்தியுள்ளார். அடுத்த சில நிமிடத்திலேயே அந்தப் பெண் போதையில் மயங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர்கள் அந்தப் பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

பின்னர் போதை தெளிந்து அந்தப் பெண் எழுந்து பார்த்தபோது தான் பாலியல் பலாத்காரத்திற்கு உடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். 

அந்தப் புகாரின் படி போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனா். அவா்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for sexuall harassment in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->