உ.பி முதல்வருக்கு மிரட்டல் - கையும் களவுமாக சிக்கிய லக்னோ வாலிபர்கள்.!
two peoples arrested for threat to up cm and ramar temple
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வெடிகுண்டுவீச்சு மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மர்ம நபர்கள் சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையின் குழு, சம்பவம் ஈடுபட்டதாக கூறி லக்னோவில் உள்ள கோமதி நகர் விபூதி காண்ட் பகுதியில் இருந்து தஹர் சிங் மற்றும் ஓம்பிரகாஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்தது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எஸ்டிஎப் தலைவர் அமிதாப் யாஷ் மற்றும் அயோத்தியின் ராமர் கோவிலுக்கு '@iDevendraOffice' என்ற கணக்கை பயன்படுத்தி தங்கள் எக்ஸ் வலைதள பதிவில் மிரட்டியுள்ளனர்.
முதலில் 'alamansarikhan608@gmail.com' மற்றும் 'zubairkhanisi199@gmail.com' என்ற மின்னஞ்சல் கணக்கு மிரட்டல் பதிவுகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டது. இந்த மின்னஞ்சல் கணக்குகளின் தொழில்நுட்ப பகுப்பாய்வுக்குப் பிறகு, தஹர் சிங் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியதும், ஓம்பிரகாஷ் மிஸ்ரா மிரட்டல் செய்திகளை அனுப்பியதும் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.டி.எப். விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
two peoples arrested for threat to up cm and ramar temple