இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய வாலிபர்கள்.! புகாரால் சிக்கிய அவலம்.!
two youths arrested for obscene photos send to woman in puthuchery
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மெசேஜ் அனுப்பினர். பின்னர் அந்த இளம்பெண்ணும், அவர்களுடன் மெசேஜ் அனுப்பி, நண்பர்கள் ஆனார்கள்.
இந்த நிலையில் வாலிபர்கள் இருவரும் அந்த இளம்பெண்ணுக்கு, ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச குறுந்தகவலை அனுப்பினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இளம்பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பியது சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த லோகேஷ், திருவள்ளூர் மாவட்டம் பாக்கத்தை சேர்ந்த குகன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணுக்கு வாலிபர்கள் ஆபாச புகைப்படம் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two youths arrested for obscene photos send to woman in puthuchery