தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாலிபர்கள் - நொடியில் தட்டித் தூக்கிய கொடூரம்.!
two youths died train accident in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கடந்த 2ம் தேதி காலை மும்பை-கொங்கன் வழித்தடத்தில் திவா மற்றும் நிலாஜே ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாண்டோவி விரைவு ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பலியானவர்களின் உடல்கள், திவாவில் உள்ள தாடிவாலி அகாசன் பகுதியில் வசிக்கும் இருவரது உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவர்களின் இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறிய நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two youths died train accident in maharastra