நிதீஷ் குமார் உடன் கைகோர்க்கும் உத்தவ் தாக்கரே! பாஜகவுக்கு எதிராக அமையப்போகும் மெகா கூட்டணி!
Uddhav Thackeray and Nitish Kumar will be formed alliance against the BJP
மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆதித்ய தாக்கரே தலைமையிலான சிவசேனா நிர்வாகிகள் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை இன்று சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பொழுது சிவசேன நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சத்ர்வேதி மற்றும் சிவசேனா கட்சியின் செயலாளர் அணில் தேசாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து பிரதமர் மோடிக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சிவ சேனா கட்சியின் சார்பாக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற முக்கிய கட்சியின் தலைவர்களுடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கி களப்பணி ஆற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை பயணத்தில் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Uddhav Thackeray and Nitish Kumar will be formed alliance against the BJP