M.Phil படிக்க மாணவர்களை சேர்க்காதீர்.!! பல்கலை மானியக் குழு சுற்றறிக்கை.!! - Seithipunal
Seithipunal


இனி எம்.பில் பட்டப்படிப்பில் சேர வேண்டாம் எனவும், எம்.பில் படிப்பில் இனி மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் எனவும் அணைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது. முதன் முறையாக கடந்த 1977ம் ஆண்டு இந்தியாவில் எம்.பில் பட்டப்படிப்பு பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எம்.எஸ்சி, எம்.ஏ போன்ற முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் எம்.பில் பட்டப்படிப்பை முடித்தால்தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிக்கு நியமனம் செய்யப்படுவர் என தகுதி நிர்ணயிக்கப்பட்டு பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தது.


இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பேராசிரியர்கள் நியமன முறையை மாற்றியமைத்த பல்கலைக்கழக மானியக் குழு ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயித்தது. அதில் எம்.பில் பட்டம் என்பது இனி வழக்கத்தில் இருக்காது எனவும், எம்.பில்., பட்டப்படிப்பில் இனி சேர வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் வரும் கல்வியாண்டு முதல் எம்.பில் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ugc circular do not admit students to study MPhil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->