யுஜிசி-நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தேசிய தேர்வு முகமை டிசம்பர்(2021) மற்றும் ஜூன்(2022) மாத பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (UGC NET) முடிவுகளை நாளை(நவம்பர் 5) வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வின் 2021டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம் என்று தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UGC NET results to be announced tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->