கழிவுநீர் துர்நாற்றத்தை தாங்கமுடியாமல் மக்கள் சாலை மறியல் போராட்டம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கழிவுநீர் துர்நாற்றத்தை தாக்கமுடியாமல் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் கடந்த ஜூன் 11ம் தேதி பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறி அப்பகுதியை சேர்ந்த செல்வராணி, செந்தாமரை, அவர்களின் மகள் காமாட்சியாகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரியாக இயங்கவில்லை. இதனால்தான் விஷவாயு உருவானதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக ட்ராப் பொருத்தப்பட்டது.

பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுத்த இடத்தில் வாட்டர் சில் பி-டிராப் பொருத்தபடாததால் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தநிலையில் , கடந்த இரண்டு நாட்களாக புதுநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று துர்நாற்றம் நெடி அதிகரித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். துர்நாற்றத்தை தாங்க முடியாமல் நேற்று இரவு எட்டு மணிக்கு அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டிபாளையம்பேருந்து நிலையம் எதிரே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சிவசங்கரன் எம்.எல்.ஏ ,பொதுப்பணித்துறை அதிகாரியுடன் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unable to bear the smell of sewage people blocked the road


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->