மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கிய 'புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள்' இயக்கம்.. !! - Seithipunal
Seithipunal



மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, " இந்தியாவில் புகையிலை பயன்பாடு நோய்கள் மற்றும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. 

மேலும் புகையிலை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. புகையிலை பயன்பாட்டின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 13.5 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த இறப்புகள் தடுக்கக் கூடிய இறப்புகள் தான்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு உலகளாவிய இளைஞர்கள் புகையிலை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 13 முதல் 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் தான் அதிகளவில் புகையிலை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. 

எனவே புகையிலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், புகையிலை பயன்பாட்டில் இருந்து இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் 'புகையிலை இல்லா கல்வி நிறுவனம்' என்ற இயக்கத்தை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தி உள்ளது.

இதன்படி பீடி, சிகரெட், குட்கா, புகையிலை உள்ளிட்ட எந்த போதை பொருட்களும் கல்வி நிறுவன வளாகத்திற்குள் உபயோகப் படுத்தப் படவில்லை என்பதற்கு ஆதாரமாக 'புகையிலை இல்லா கல்வி நிறுவனம்' என்ற அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். 

மேலும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 100 அடி தொலைவுக்குள் எந்த புகையிலை பொருட்களும் விற்க அனுமதிக்க கூடாது. மேலும் கல்வி நிறுவனங்களின் நடத்தை விதிகளில் புகையிலை பயன்படுத்தாமை என்பதையும் சேர்க்க வேண்டும்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Educational Ministry Started a Tobacco Free Educational Institutions Campaign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->