திடீர் திருப்பம்... மத்திய சட்டத்துறை இணையமைச்சரும் மாற்றம்..!! காரணம் இதோ..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு முறை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சி அமைந்த நிலையில் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பாஜக ஆட்சி அடுத்த ஆண்டுடன் நிறைவடைந்து நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண் ரிஜிஜூ இன்று காலை புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும் தற்போது மாற்றப்பட்டுள்ளார். மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகல் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு கொலீயம் என்பது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகளை கொண்ட குழுவாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைகளை இந்த குழுவே வழங்கி வருகிறது. இப்படி உச்சபட்ச அதிகாரம் படைத்த கொலீஜியத்தை வெளிப்படைத் தன்மையற்ற அமைப்பு என விமர்சித்தார். இதன் காரணமாக இன்று காலை கிரண் ரிஜிஜு மாற்றப்பட்ட நிலையில் தற்போது சட்டத்துறை இணை அமைச்சரும் மாற்றப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union joint minister of law has also changed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->