மாதம் ரூ.500 யூனிட் மின்சாரம் இலவசம் - அமித்ஷா அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்த நிலையில், மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தலும் வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:- "முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை கண்டு அஞ்சினர்.

ஆனால் இன்று பாகிஸ்தான்தான் பிரதமர் மோடியைப் பார்த்து அஞ்சுகிறது. அதனால் தான் எல்லைகள் அமைதியாக உள்ளன. மீண்டும் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்த அவர்கள் துணியமாட்டார்கள். அப்படி அவர்கள் துணிந்தால், அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். 

காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைந்தால் மாதம் ரூ.500 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவோம். விவசாயிகளுக்கு தற்போதுள்ள ரூ.6 ஆயிரம் நிதிக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amitsha election promise in kashmir


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->