குடும்பத்தின் ஒரு நாள் எரிபொருள் செலவு 5 ரூபாய் - மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


'உஜ்வாலா' திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் குடும்பங்களின் ஒரு நாள் எரிபொருள் செலவு, 5 ரூபாயாக உள்ளதாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு விறகு மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் விதமாக, உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ், விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டம் தொடர்பாக, மத்திய அமைச்சர் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது-: "சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி சமைக்கும் குடும்பங்களின் எரிபொருள் செலவு குறித்து சமீபத்தில் கணக்கிடப்பட்டது. 

அப்போது, உஜ்வாலா பயனாளிகளின் குடும்பத்துக்கு ஒரு நாள் செலவு, 5 ரூபாய்க்கு சற்று அதிகமாகவும்; மற்றவர்களுக்கு, 12 ரூபாயாகவும் இருப்பது தெரியவந்தது. கடந்த 2014ம் ஆண்டு, நாட்டில், 14 கோடியாக இருந்த சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை, நடப்பாண்டு 33 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு உஜ்வாலா திட்டம் ஒரு முக்கிய காரணமாகும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister info gas usager one day five rupees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->