ஒரே நாடு ஒரே தேர்தல் 2029 க்கு பிறகு தான் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!
union minister nirmala seetharaman speech about one country one election
வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

"பாராளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தல் முறையே ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் இருப்பது நல்லது. 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் குடியரசுத் தலைவர் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
union minister nirmala seetharaman speech about one country one election