என்ன கொடுமை இதெல்லாம்!!! சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ வழக்கு! விவரம் என்ன?
POCSO case against person who got girl pregnant
சேலம் ஆத்தூர் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு என்பவர்.இவரது மகன் 26 வயதான மணிகண்டன் என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றுகிறார்.

இவர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் சில காலமாக காதலித்து வந்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு செல்லியம்பாளையத்தில் குடும்பம் நடத்தினர்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமான நிலையில்,பிரசவத்திற்காக சிறுமி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதில் மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமிக்கு 17 வயது ஆவது தெரியவந்து அதிச்சியடைந்தனர். இது குறித்து மருத்துவர்கள், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சிறுமியை குழந்தை திருமணம் செய்து காப்பமாக்கிய மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் இது அறியாமையால் நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடந்ததா? எனக் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
English Summary
POCSO case against person who got girl pregnant