பேருந்து மீது தீவிரவாத தாக்குதல் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம்.!
union minister rajnath singh condems terrorist attack
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாஸி மாவட்டம் ரான்ஸூ என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 33 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:- "ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. யாத்ரீகர்களுக்கு எதிரான இந்த கொடூரமான செயலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
union minister rajnath singh condems terrorist attack