பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற அரசு உறுதி - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;-

"பிரதமர் மோடியின் தலைமையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதிய இலக்குகளை அடைந்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

2023-24ல் இந்தியாவின் உற்பத்தி மதிப்பு ரூ.1,26,887 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பை விட 16.8% அதிகமாகும்.

பாதுகாப்பு பொருட்களைத் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறை நிறுவனங்களை வாழ்த்துகிறேன். உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு உகந்த ஆட்சியை உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது." என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister rajnath singh tweet about india growth defense manufacturing


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->