100 நாள் வேலைத் திட்டம் - அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!
union minister sivaraj singh speech about 100 days work
நேற்று வேளாண், விவசாயிகள் நல அமைச்சகத்தின் 100 நாள் செயல்திட்டம் குறித்து மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் உறுதிப்பாட்டின்படி பணிகள் விரைந்து நடைபெறும் வகையில், விவசாயிகள் சார்ந்த பணிகளில் அதிகாரிகள் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
நாட்டின் வேளாண் துறையை வலுப்படுத்தவும், விவசாயிகளின் பிரச்சனைகளை களையவும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமது விவசாய சகோதர, சகோதரிகளுக்கு தரமான உரங்கள், விதைகள், பிற இடுபொருட்கள் கிடைப்பதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளக்கூடாது என்றும், இது குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும், நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர், நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர, உலகின் பிற நாடுகளுக்கு அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப தரமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய உறுதியான திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
English Summary
union minister sivaraj singh speech about 100 days work