இந்தியாவுடன் பாகிஸ்தான் விரைவில் இணைவது அந்நாட்டுக்கு நல்லது - முதல்வர் யோகி ஆதித்யாநாத்!
UP CM Say Pakisthan joint to India
"இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைவது அந்நாட்டுக்கு நல்லது" என்று, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பெட்ரோல் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவோடு விரைவாக பாகிஸ்தான் இணைவது அந்நாட்டுக்கு நல்லது என்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பாகிஸ்தான் நாட்டுக்கு என்று ஆன்மிக உலகில் தனி அடையாளம் என்று ஏதுமில்லை.
ஒரு விஷயம் உண்மையானதாக இல்லை என்றல் அது நீண்ட காலம் நீடிக்காது. அது (பாகிஸ்தான்) இந்தியாவோடு விரைவாக இணைவது அதற்கு (பாகிஸ்தானுக்கு) நல்லது.
'இந்து' என்று குறிப்பிடுவது ஒரு பிரிவோ, ஒரு மதமோ, ஒரு நம்பிக்கையோ கிடையாது. அது ஒரு கலாச்சார பெயர். இந்து அடையாளம் இந்தியாவின் அனைவருக்குமான கலாச்சார குடியுரிமை.
இந்து என்பதை மதத்தோடு, நம்பிக்கையோடு, பிரிவோடு நாம் இணைக்கிறோம் என்றால், புரிந்துகொள்வதில் நாம் தவறு செய்கிறோம் என்று அர்த்தம்.
ஹஜ் செல்லும் இந்தியர்களை, அங்குள்ளவர்கள் இந்து என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இந்தியர்களை அவர்கள் ஹாஜியாக, இஸ்லாமியர்களாக ஏற்பதில்லை.
இதன் பின்னணியில் நீங்கள் பார்த்தால் இந்தியா ஒரு இந்து நாடு என்பது உங்களுக்கு புரியும். இந்திய குடிமக்கள் அனைவரும் இந்துக்கள்தான்" என்று யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.
English Summary
UP CM Say Pakisthan joint to India