ஹோட்டல் அறையில் கொலை செய்யப்பட்ட 5 பெண்கள்! மகன் கைது! உச்சகட்ட பரபரப்பில் உ.பி! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில், விடுதி அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 4 மகள்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், காவல்துறையினர் விரைந்து சென்று 5 பெண்களின் (தாய் அஸ்மா மற்றும் நான்கு சகோதரிகள் ஆலியா (வயது 9), அல்ஷியா (வயது 19), அக்ஸா (வயது 16), ரஹ்மீன் (வயது 18) உடல்களை மீட்டனர். உடல்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.  

புத்தாண்டின் முதல் நாளான இன்று, லக்னோவில் உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட போலீசார் 24 வயதான அர்ஷத் என்பவரை கைது செய்துள்ளனர்.  

மேலும், அர்ஷத் கொலையான பெண்ணின் மகன் என்பதுடன், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைகளுக்கான காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP Mother and 4 daughter murder case son arested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->