சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்!
Strong earthquake Tsunami warning withdrawn
அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடு பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியன்மார் நாட்டில் சமீபத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 10 நகரங்கள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியன்மார் நாட்டுக்கு உதவ இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் முன்வந்தன.இந்த சக்தி வாய்த்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின.ஏராளமானோர் கட்டிட ஈடுபாடிகளில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமல்லாமல் கட்டிடங்கள் தரைமட்டம் ஆனதால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன.இன்றும் மியான்மர் நாட்டு நிலைகுலைந்துதான் காணப்படுகிறது.
இந்தநிலையில் அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடு பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.இதற்கிடையே, சிறிது நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
English Summary
Strong earthquake Tsunami warning withdrawn