4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rain likely in 4 districts Meteorological Department Information
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.நேற்று ஒருசில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்தது .கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சுமார் 4 மணிநேரம் மிதமான மழை பெய்தது .இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.மேலும் இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rain likely in 4 districts Meteorological Department Information