உத்தரகண்ட் || ஹெலிகாப்டர் தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்..!
utarakant helicoptar fire accident
ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் அருகே உள்ள குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கருட் சட்டி பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாகவும், ஏழு பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதற்கான விசாரணை விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி வரை மோசமான வானிலையின் காரணமாக கூட இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், "உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்துள்ளேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன" என்று பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
utarakant helicoptar fire accident