தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன் தலைமறைவு: பின்னணியில் காதல் கதை!  - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் காதல் விவகாரத்தில் அண்ணன், தங்கையை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம், ஷேக்புரா காதீம் கிராமத்தைச் சேர்ந்தவர் முஸ்கான் (வயது 17). இவர் அதே கிராமத்தில் உள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்ந்து குறுஞ்செய்தி மூலம் பேசி வந்துள்ளார். 

இது குறித்து அறிந்த முஸ்கானின் சகோதரர் ஆதித்யா குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்த வேண்டும் என கண்டித்துள்ளார். 

இதனை சிறிதும் பொருட்படுத்தாமல் முஸ்கான் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதித்யா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தங்கையை சூட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார். 

இது குறித்து அறிந்த முஸ்கானின் தாய் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முஸ்கானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முஸ்கான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முஸ்கான் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆதித்யாவை தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கை போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh brother killed his sister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->