உத்திரபிரதேசம், ஐந்தாம் கட்ட தேர்தலில் 54 விழுக்காடு வாக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் 5ஆம் கட்ட தேர்தலில் 54 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

உத்தர பிரதேச மாநிலத் தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில், 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது. 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

காலை நேரத்தில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவு அதிகரிக்கத் தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவீத வாக்குப்பதிவும், மதியம் 1 மணி நிலவரப்படி 34.83 சதவீத வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

உத்திரப் பிரதேசத்தில் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 54 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மேலும், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் மார்ச் 3-ஆம் தேதி அன்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7-ஆம் தேதி அன்றும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->