தாமரை மட்டுமே லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து வரும் - ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


பாஜக -வின் தாமரை சின்னம் மட்டுமே லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து வரும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடைபெற்று முடிந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

ஆளும் கட்சியான பாஜகவுக்கு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி சவாலாக விளங்குகிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர் என முக்கிய தலைவர்கள் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அமேதி தொகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, லட்சுமி தேவியை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை கடுமையான விமர்சனங்களுடன் தாக்கி பேசினார். தாக்கினார். 

லட்சுமி தேவி யாருடைய வீட்டிற்கும் சைக்கிளிலோ அல்லது யானை மீதோ அல்லது யார் ஒருவரின் கையில் அமர்ந்தோ வருவதில்லை என்றும் லட்சுமி தேவி தாமரை மீது தான் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிப்பதாக கூறி பிரசாரம் மேற்கொண்டார். 

அதாவது அகிலேஷ் யாதவின் சைக்கிள் சின்னம், பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் ஆகியவற்றை குறிப்பிட்டு அவர்கள் மூலம் லட்சுமி தேவி யாருடைய வீட்டிற்கும் வருவதில்லை என்றும் பாஜக -வின் தாமரை சின்னம் மட்டுமே லட்சுமி தேவியை வீட்டிற்கு கொண்டு வரும் என்று பிரசாரம் மேற்கொண்டார். பிரதமரின் பல்வேறு திட்டங்கள், லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதன் அறிகுறிகள் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்தியாவில் பாஜக மட்டுமே நல்லாட்சியை வழங்குவதாகவும், பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->