உ.பியில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க. நிச்சயம் தோல்வி அடையும் - அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


அடுத்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுகிற கட்சிதான் மத்தியில் ஆளுங்கட்சியாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 

இதை முன்னிட்டு உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது:- "உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க. நிச்சயம் தோல்வி அடையும். இன்னும் பல ஆண்டுகள் ஆட்சி செய்வோம் என்று அந்தக் கட்சியும், இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் என்று அதன் தலைவரும் கூறுகிறார். 

ஆனால், பா.ஜ.க. கட்சி ஆட்சியின் ஆயுள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது. பா.ஜ.க. கட்சியின் தேசியத்தலைவர், இங்குள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு வருகை தரவேண்டும். அப்படி அவர் வந்தால், பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

லக்னோவில் மாநில செயற்குழு கூட்டத்தைக்கூட்டும் பா.ஜ.க., போலீஸ் காவலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியும், அரசு வேலையையும் வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

உத்தர பிரதேச மாநிலத்திற்கு லண்டனில் இருந்தும், நியூயார்க்கில் இருந்தும் முதலீடுகளைக் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். ஆனால், இப்போது மாவட்டங்களில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் யாரை முட்டாள் ஆக்குகிறார்கள்? என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh ex chief minister akilesh yadav press meet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->