போலீசுக்கு இப்படி ஒரு சோதனை வரவே கூடாது! கைது செய்யப்பட்ட உ.பி., முகேஷ் யாதவ் - கலங்கிப்போன காவல்துறை!
Uttar pradesh fake police mukesh arrest
பார்ப்பதற்கு எந்த வகையிலும் போலீஸ் போன்ற தோற்றமில்லாத நபர் ஒருவர், இன்ஸ்பெக்டர் வேடமடைந்து பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போலீஸ் வேடம் அணிந்து வழிப்பறியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது.
அண்மையில் பீகார் மாநிலத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் போலி போலீஸ் ஸ்டேஷன் ஒன்றையே ஒரு கும்பல் நடத்தி வந்து நடத்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாவட்டத்தின் தலைநகரத்தில் செயல்பட்டு வந்த இந்த போலி போலீஸ் ஸ்டேஷனை காதலர்கள் இருவர் நடத்தி வந்ததும் அம்பலமாகியது.
இதே போல் சென்னை மெரினா கடற்கரையில் தாங்கள் போலீஸ் என்று கூறி, அங்கு சல்லாபம் செய்ய வரும் காதல் ஜோடி, கள்ள காதல் ஜோடிகளிடம் வழிப்பறிவில் ஈடுபட்ட போலி போலீசர்களை கைது செய்த சம்பவங்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அரங்கேறி வருவது தொடர்கதை தான்.
கடந்த வாரம் கூட சென்னை மாநகர பேருந்தில் முன் இருக்கையில் கணவனுடன் அமர்ந்திருந்த இளம் பெண்ணை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர், தான் ஒரு போலீஸ் என்று கூறி, இளம் தம்பதியினரை மிரட்டிய காணொளியும் வைரலாகியது. பின்னர் விசாரணையில் அவர் போலீஸ் இல்லை என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் இன்ஸ்பெக்டர் வேடமடைந்து பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த முகேஷ் யாதவ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு போலீசுக்கு உண்டான எந்த தோற்றமும் இல்லாத இந்த நபர், தான் போலீஸ் என்று சொன்னால் மக்கள் நம்பி ஏமாறுவார்கள் என்று, இவர் நம்பிக்கை வைத்தது தான் பெரும் கொடுமை.
English Summary
Uttar pradesh fake police mukesh arrest