₹.100 கோடி கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி.! 3,000 வங்கிக் கணக்குகள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில், சில கல்வி நிறுவனங்கள் போலியாக மாணவர்களுடைய பெயரில் கல்வி உதவித் தொகைய மோசடியில் ஈடுபட்டு வருவதை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் லக்னோ உள்ளிட்ட 22 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

லக்னோவில் இருக்கும் ஹைஜியா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபார்மஸிக்கு சொந்தமாகவுள்ள மூன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த அதிகரிகளின் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அமலாக்கத் துறை அதிகாரிகள் லக்னோ, பார பங்கி மற்றும் ஹர்டோய், பரூக்காபாத் ஆகிய மாவட்டங்களில் செயல்படுகின்ற கல்வி நிலையங்களில் சோதனை மேற்க்கொண்டனர்.

இதன் முடிவில், அமலாக்கத் துறை அதிகாரிகள், "உ.பி-யின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகையில் மோசடி நடந்துள்ளது. முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.100 கோடிக்கும் அதிகளவில் மோசடி நடந்துள்ளது இவ்விசாரணையில் தெரிய வந்துள்ளது. கல்வி உதவித் தொகை மோசடி குறித்து இதுவரை சுமார் 3,000 வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு முடக்கியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh institutions cheat Education loan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->