புதியதாக போடப்பட்ட சாலை! திடீரென உருவான 5 அடி பள்ளம்! பீச்சி அடித்த தண்ணீர்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் புதியதாக போடப்பட்ட சாலையில் திடீரென உருவான பள்ளத்தால்  மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு ரோட்டின் ஒரு புறத்திலிருந்து கால்வாய் தண்ணீர் மறுபக்கத்தில் உள்ள வயல்வெளிக்கு புகுந்துள்ளது.

புதியதாக போட்ட சாலை உடையும் அளவிற்கு மோசமான முறையில் சாலைகளை போடப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.

அண்மையில் உத்தரபிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ராமர் கோவில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதியதாக போடப்பட்ட தார் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கால்வாய் வழியாக விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதியதாக போடபோட்ட தார்சாலையில் திடிரென பள்ள ஏற்பட்டு கால்வாய் வழியாக தண்ணீர் வயல் வெளிக்கு செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளபக்கமான எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh people are shocked by the sudden formation of a pothole on a newly laid road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->