கழிவறையில் வைத்து வீராங்கனைகளுக்கு உணவு.. வினோத விளக்கம் கொடுத்த அதிகாரிகள்.!
Uttar Pradesh under 17 players food provided from toilet
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபடி வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் வைத்து உணவு கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு இடம் பற்றாக்குறை தான் காரணம் என்று அதிகாரிகள் விளக்கம் கொடுத்தது பெரும் கொடுமையான விஷயமாக கண்டனங்களை பெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சஹரான்பூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி இளம்பெண்களுக்கான அண்டர் 17 கபடி போட்டி மாநில அளவில் நடைபெற்றது. அப்பொழுது, இதில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு மதிய உணவை கழிவறையில் வைத்து கொடுத்துள்ளனர்.
கழிவறைக்குள் மாணவிகளை அமர வைத்து சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விளையாட்டு மைதானத்தின் கட்டிடப் பணிகள் முழுமை அடையாத நிலையில் இருப்பதாகவும், நீச்சல் குளத்திற்கு அருகே உணவு சமைக்கப்பட்டது என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது.
அந்த நேரத்தில் மழை பெய்த காரணத்தால் வேறு வழியே இல்லாமல் தான் கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அதிர்ச்சியீட்டும் பதிலை கொடுத்துள்ளனர். இதை சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் கண்டித்து இதுதான் பாஜக ஆளும் உ.பி.அரசின் மாடலா என்று தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
English Summary
Uttar Pradesh under 17 players food provided from toilet