மோடியை நிலைகுலைய வைத்த விபத்து! பலியான 36 பேர்! காலையிலேயே நாட்டை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
Uttarakhand Bus Accident PM Modi Announce
உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம், கார்வாலிலிருந்து குமாயூன் நோக்கி சென்ற பேருந்து, மார்ச்சுலா என்ற பகுதியில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து நேரத்தில் பேருந்தில் 40 பேர் பயணம் செய்திருந்ததாகவும், இதுவரை 36 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த துயரச்செய்தி குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லவும், தேவையெனில் படுகாயமடைந்தவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யவும் மாவட்ட நிர்வாகம் விரைவாக முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
English Summary
Uttarakhand Bus Accident PM Modi Announce