பாதியாக குறைக்கபட்ட வந்தே பாரத் ரயிலின் வேகம்!! எதற்காக? - Seithipunal
Seithipunal


வந்தே பாரத் ரயிலின் அதன் சராசரி வேகம் கூட பாதியாக குறைந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

தற்போது உள்ள அதி நவீன மற்றும் அரை அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயிலின் வேகம் பாதியாக குறைந்துள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரயில்வே அமைச்சகமே இந்த தகவலை கூறியுள்ளது. வந்தே பாரதின் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 160KM , ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களும் சராசரியாக மணிக்கு 76 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டுள்ளன.

இதை பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சில வந்தே பாரத் ரயில்கள் தொலைதூர பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளின் புவியியல் சூழல், தண்டவாள பராமரிப்பு, மோசமான வானிலை போன்ற காரணங்களால் அதிவேகமாக ரயிலை இயக்க முடியவில்லை. மும்பை CSMT மற்றும் Madgaon இடையே இயங்கும் வந்தே பாரத் கொங்கன் இரயில்வேயின் மலைப்பகுதிகள் வழியாக செல்கிறது. இங்கு வேகத்தை அதிகரிப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இதேபோல், ஜம்மு மற்றும் கத்ரா இடையே ஓடும் வந்தே பாரத் கூட குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது. மழைக்காலத்தில் இங்குள்ள நிலைமைகள் இன்னும் சவாலானதாக மாறும்" என்று கூறியுள்ளனர்.

வந்தே பாரத் ரயில் திட்டம் கடந்த 15 பிப்ரவரி 2019 அன்று தொடங்க பட்டது. முதல் வந்த பாரத் ரயில் வாரணாசி மற்றும் புது தில்லி இடையே இயக்கப்பட்டது. அதன் பிறகு, இரண்டாவது வந்தே பாரத் புது தில்லி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோதேவி கத்ரா இடையே இயக்கப்பட்டது. முதலில் வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோமீட்டராக இருந்தது.

பிறகு மாடுகள் மோதியதில் இந்த வந்த பாரத் ரயிலுக்கு அடிக்கடி சேதாரம் ஏற்பட்டு வந்துள்ளன, மேலும் இந்த வந்தே பாரத் ரயில் 160KM வேகத்திற்கு செல்ல வழித்தடங்கள் சரி இல்லாமலும், கரடு முரடாக உள்ளதால், அந்த வேகத்தில் ரயிலை இயக்குவதற்கு வழி தடம் ஏற்புடையதாக இல்லை. மேலும், டெல்லி-ஆக்ரா வழித்தடத்தைத் தவிர, இந்த ரயிலை மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் எங்கும் இயக்க முடியாது என்று தெரிவிக்க பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vande bharat train speed has been reduced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->