இந்திய இளைஞரை கரம்பிடித்த வியட்நாம் இளம்பெண்.! இளைஞர் நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து கரம்பிடித்து உள்ளார். 

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் வியட்நாமில் கடந்த 8 வருடங்களாக யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். குயூன் டிசங் என்ற இளம்பெண் பிரதீப்பை நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழகியுள்ளனர். பின்னர் இருவருக்கும் பிடித்து காதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் குயூன் பிரதீப்புக்கு சொந்தமான கிராமத்திற்கு வருகை புரிந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக அந்தப் பெண்ணின் பெற்றோரால் இந்தியாவிற்கு வர முடியாமல் போனது. இந்திய முறைப்படி பத்திரிகை அடித்து உணவு பரிமாறப்பட்டு இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, பிரதீப் "நாங்கள் இருவரும் காதலித்தோம். அவள் என்னை திருமணம் செய்து கொள்ள எனது கிராமத்திற்கு வருவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vietnam women married karnataka men


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->