''போலியான கோலியுடன் செல்பி'' : அயோத்தியில் குவிந்த ரசிகர்களால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் நட்சத்திர போட்டியாளரான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 

ஆனால் இருவரும் பங்கேற்கவில்லை. அயோத்தியில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். 

அப்போது கூட்டத்தில் ஒருவர் விராட் கோலி போன்று இருந்துள்ளார். அவரது நடை, செயல் போன்றவையும் உண்மையான விராட் கோலி போல இருந்துள்ளது. 

இதனை தொடர்ந்து அவர் இந்திய அணியின் ப்ளூ ஜெர்சி அணிந்திருந்ததால் ரசிகர்கள் விராட் கோலி தான் என நினைத்து அவரை சூழ்ந்து செல்பி எடுக்க ஆரம்பித்தனர். 

அதற்கு பின்னர் தான் அவர் போலியான விராட் கோலி என தெரியவந்துள்ளது. இருப்பினும் அவருடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். 

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat kohli lookalike mobbed fans selfies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->