பாராளுமன்றத்தில் வக்ஃப் சட்ட திருத்த மசோதா பெயர் மாற்றம்! கடுமையான எதிர்ப்பு, விவாதம்!
Waqf Amendment Bill Kiren Rijiju
பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்து எட்டு மணி நேர விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளன. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கூட இதற்கு எதிராக நிலைபெற்றுள்ளது. "பாராளுமன்ற கூட்டுக்குழுவில் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வக்ஃப் மசோதாவை இனி "ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு (UMEED)" மசோதா என மறுபெயரிடப்படுவதாக கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
மசோதா தொடர்பாக மக்களவையில் உரையாற்றிய அவர், "வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் அவர்களை தவறாக வழிநடத்தப் போகிறீர்கள்?" என்றார்.
அத்துடன், "வக்ஃப் சொத்துக்கள் தனியார் சொத்துகளாகவே கருதப்பட வேண்டும். ரயில்வே, ஆயுதப்படை நிலங்களோடு ஒப்பிடுவது முறையல்ல. உலகிலேயே அதிக வக்ஃப் சொத்துகள் இந்தியாவில் தான் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Waqf Amendment Bill Kiren Rijiju