இனி 10 நாட்களில் மரண தண்டனை! ஆளுநர் ஒப்புதல் தரல சம்பவம் உறுதி - மம்தா விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று,  மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.

10 நாட்களில் மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும், அடுத்த வாரம் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.

மேலும், போராடி வரும் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி, போராடி வரும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று பந்த் நடைபெறும் நிலையில் மம்தா பானர்ஜி இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வாரம் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மரண தண்டனை வழங்குவது குறித்து கொண்டுவரப்படும் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றல் போராட்டம் விடுக்கும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தான் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கினால் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WB mamta banerjee Announce Death Penalty law in 10 days for Abuse case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->