பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்....ஜனாதிபதி முர்மு ரக்சா பந்தன் தின வாழ்த்து!
We must ensure the safety of women Happy Murmu Raksha Bandhan Day to the President
நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள பிணைப்பை கொண்டாடும் பண்டிகையாக ரக்சா பந்தன் விளங்கி வருகிறது.
இதனையொட்டி பல்வேறு தலைவர்களும் ரக்சா பந்தன் தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி ரக்சா பந்தனை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், இந்த ரக்சா பந்தன் தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும், சகோதர சகோதரிகளிடையே அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை உணர்வை அடிப்படையாக கொண்ட இந்த பண்டிகை,
அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசம் மற்றும் மதிப்புணர்வை ஏற்படுத்துகிறது என பதிவிட்டு உள்ளார். மேலும், இந்த பண்டிகை தினத்தில், நம் சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மதிப்பை உறுதி செய்வோம் என நாட்டிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும், வலியுறுத்தி உள்ளார்.
English Summary
We must ensure the safety of women Happy Murmu Raksha Bandhan Day to the President