வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
Weather Update Bay Of Bengal low pressure point
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் இது நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (26.07.2024) 08:30 மணியளவில் நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களுக்கு மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 26.07.2024 மற்றும் 27.07.2024:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28.07.2024 முதல் 30.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Weather Update Bay Of Bengal low pressure point