சூனியம்! இரண்டு பெண்களை அடித்தே கொலை செய்த கிராம மக்கள்! அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் சூனியம் வைப்பதாக நினைத்து இரண்டு பெண்களை கிராம மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிர்பூம் மாவட்டம், ஹரிசரா கிராமத்தில் உள்ள ஒரு ஓடையில் இன்று காலை இரண்டு பெண்களின் பிணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 

இந்த இரு பெண்களின் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று இரவு இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவர்களின் பெயர் லாட்கிகிஸ்கு, டோலி சோரன் என்பதும் தெரிய வந்தது. 

இதில் இறந்த ஒரு பெண்ணின் மகள் சம்பவம் நடந்தது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கையில், தனது தாய் மற்றும் உறவினர் இருவரையும் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று, மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். 

என்னுடைய சகோதரர்கள் கூட எனது தாயை காப்பாற்ற முடியாத அளவுக்கு கிராமத்தினர் கடுமையாக எனது தாய் மற்றும் எனது உறவுக்கார பெண்ணை கடுமையாக தாக்கி, அவர்களின் உடலை ஓடையில் வீசி சென்றனர் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இது குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, உயிரிழந்த கிராம மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இரு பெண்களும், சூனியம் வைத்ததாக எண்ணி, கிராம மக்கள் அடித்து கொன்றதாக தெரிவிக்கின்றனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த 15 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும். பிறந்த பெண்களின் உடல்களை உடல் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal 2 woman Attacked and Killed Village people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->