நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து: தொழிலாளர்களின் கதி?  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிகஞ்ச் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட நாராயண குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் சுரங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த தினேஷ் ரூயிடாஸ் (வயது 38), சுமிர் பௌரி (வயது 17), சுர்ஜித் சென் (வயது 21)  என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக சீதாராம்பூர் சுரங்க பாதுகாப்பு மண்டல இயக்குனர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

இந்த சட்டபூர்வ சுரங்கமாயினும் நேற்று பிற்பகல் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கும் போது இந்த விபத்து நடைபெற்றது. 

இந்த விபத்தில் 3 பேர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Coal Mine Collapse Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->