பரபரப்பில் மேற்குவங்கம்! பெண் அதிகாரியை மிரட்டிய சம்பவம்! மேற்கு வங்க சிறை துறை அமைச்சர் பதவி விலகல்!
West Bengal Prisons Minister Akilgiri resigns
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க சிறை துறை அமைச்சர் அகில்கிரி பெண் வனத்துறை அதிகாரியை தரைகுறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோ காட்சிகளில், தாஜ்மீர் பகுதியில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் மனிஷா சாகு என்பவரை உள்ளூர் மக்களுக்கு மத்தியில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசியும் கட்டையால் அடிப்பேன் என்றும் பதவியை பறிப்பேன் என்றும் சிலை துறை அமைச்சர் அகில் கிரி பேசியிருப்பது அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது எடுத்து சொந்த கட்சிகள் இருந்தே பல்வேறு நபர்கள் சிலை துறை அமைச்சர்க்கு எதிர்ப்பை தெரிவித்தனர். முதலமைச்சர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அகில் மன்னிப்பு கேட்டாக வேண்டும் இல்லை என்றால் உடனடியாக பதவி விலகும் வலியுறுத்தியது.
தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்து அகிலகிரி சிறைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கிரி சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பாஜக உள்ளிட எதிர்க்கட்சிகள் வலுவருத்து வருகின்றன.
அகில் கிரி தாஜ்மீர் கடற்கரை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான இடத்திலிருந்து சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளை மனுஷா அதிகாரி குழுவினர் அகற்றியதுதான் அமைச்சரின் இந்த கோபத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
English Summary
West Bengal Prisons Minister Akilgiri resigns