ஜம்மு - காஷ்மீர் ... நடந்தது என்ன?!
What Happened in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது ரியாஸி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற இடத்தில் ஜூன் 9 நேற்று மாலை 6 மணியளவில், அங்கு சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது திடீரென சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த திடீரென நடந்த எதிர்பாராத சம்பவத்தால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 33 பேர் படு காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இன்னும் அந்த பேருந்தில் பயணித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் தெரிய வரவில்லை. இவர்கள் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
இதற்கிடையே இந்த பேருந்து சிவ கோரி குகைக் கோயிலில் இருந்து ரியாஸி மாவட்டத்தில் உள்ள கத்வாரா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமைக் குழு சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரிக்க வந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கங்களும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் ராணுவத்தினர் இன்று அதிகாலை முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
English Summary
What Happened in Jammu Kashmir